தனியார் நிறுவனங்கள் முழுமையான ஊழியர்களுடன் இயங்க டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆனால் தனியார் நிறுவனங்கள் பெரும்பாலான ஊழியர்கள் வீடுகளில் இருந்தே வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
அதே போன்று டெல்லியில் தற்போது உள்ள தொழிலாளர்களை மட்டும் கொண்டு கட்டிடப் பணிகளைத் தொடங்கலாம் என்று அவர் கூறினார். ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தடை விதிக்கப்பட்ட பணிகள் அனைத்தும் நடைபெறலாம் என்றும், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டும் அத்தியாவசியப் பணிகள் தவிர மற்ற பணிகள் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.