பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத முகாம்களை எந்த நேரத்திலும் அழிக்க தயாராக இந்திய விமானப்படை இருக்கிறது என அதன் தளபதி ஆர்கேஎஸ்.பஹதவுரியா தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்த அவர், சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக வெளிவரும் தகவல்கள் பற்றி மக்கள் கவலை கொள்ள வேண்டாம் எனவும் அதை இந்திய விமானப்படை சாதுர்யமாக கையாளும் என்றும் உறுதி அளித்தார்.
ஹந்த்வாரா தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் விமானப்படை அதிக எண்ணிக்கையில் ரோந்துப்பணிகளை நடத்துவது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்திய மண்ணில் தீவிரவாத சம்பவங்களை நிகழ்த்திய பிறகு பாகிஸ்தான் இப்படி பதற்றப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றார்.