புதுச்சேரியில் நாளை முதல் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மதுபானக் கடைகளை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் புதுச்சேரியிலும் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று நண்பகலில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, நாளை முதல் மதுக்கடைகளை திறந்து, தனிநபர் இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்யலாம் என அறிவித்தார். ஆனால் பார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.