கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்திலும் ஆன்லைன் மூலம் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நோய் பரவலை தடுக்க 4ம் கட்டமாக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மாநில அரசுகள் அனுமதிக்கும் பட்சத்தில் மால்களை தவிர மற்ற இடங்களில் சலூன்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை மற்றும் ஆரஞ்ச் நிற மண்டலங்களில் மட்டும் ஆன்லைன் மூலம் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர மற்ற இடங்களிலும் இந்த சேவையை தொடங்க ஆன்லைன் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.