மும்பையில் 42 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்வதாகவும், அவர்களே கொரோனா தாக்குதலுக்கு இலக்காகி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் சராசரியாக ஒரு சதுரக் கிலோமீட்டர் பரப்பில் 25ஆயிரம் பேர் வாழ்கின்றனர். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 42 விழுக்காட்டினர் குடிசைப் பகுதிகளிலேயே உள்ளனர்.
57 விழுக்காடு குடும்பங்கள் ஓர் அறை கொண்ட வீடுகளிலேயே வாழ்கின்றனர். இதனால் ஒருவருக்கொருவர் இடைவெளியைக் கடைப்பிடிக்க இயலாது. அதிக அளவாகக் குர்லாவில் ஒரு சதுரக் கிலோமீட்டர் பரப்பில் 66 ஆயிரத்து எண்ணூறு பேர் என மக்கள் நெருக்கம் உள்ளது.
இந்தப் பகுதிகளில் போதிய காற்றோட்டம், வெளிச்சம், இடைவெளி, கழிப்பறை வசதி ஆகியவை இல்லை என்றும், அவற்றைச் செய்துகொடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.