வங்கக் கடலில் உருவாகி அதி தீவிரப் புயலாக அறிவிக்கப்பட்டுள்ள அம்பன் புயல் புதன்கிழமை மாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை நிலவரப்படி ஒடிசாவின் பாராதீப்புக்குத் தெற்கே 980 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு, வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் நாளைமறுநாள் மாலை, மேற்கு வங்கத்தின் திக்கா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 180 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.