மாநிலங்களுக்கு இடையிலான தடைகள் நீக்கப்ப்பட்டதால் மத்தியப் பிரதேச நகரான இந்தூரில் இருந்து ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கிடைத்த வாகனங்களில் ஏறி சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர்.
கார் , ஷேர் ஆட்டோ, மினி வேன், லாரிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கே சோதனை சாவடிகளில் வாகனம் நிறுத்தப்படும் போது பயணிகளுக்கு சிற்றுண்டி, குடிநீர் பாட்டில், முகக்கவசம் விற்று பலர் அன்றாடம் புதிய தொழில் பழகிக் கொண்டுள்ளனர்.