ஊரடங்கை வரும் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அனைத்து விதமான பயணிகள் விமான சேவையும் மே 31 நள்ளிரவு வரை ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எப்போது சேவையை துவக்க முடியும் என உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு தக்க சமயத்தில் தகவல் அளிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு நடக்கும் சரக்கு விமான சேவைக்கு எந்த தடையும் இல்லை எனவும் அவை தொடர்ந்து நடக்கும் எனவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து இந்திய பயணியர் விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.