ஹைதராபாத்தில் லாரி கிளீனரை ஒருவரை பட்டபகலில் சிறுத்தை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில், ஹைதராபாத் சாலையில் சிறுத்தை ஓய்வெடுக்கும் காட்சி வெளியாகியிருந்தது.
அப்போது அந்த சிறுத்தை விரட்டியதால் அச்சமடைந்த ஓட்டுநர் வேகமாக லாரியில் ஏறியநிலையில், கிளீனர் பதற்றத்தில் இருந்ததால் வேகமாக ஏற முடியவில்லை. இந்நிலையில் டிவைடர் வழியாக பாய்ந்து வந்த சிறுத்தை அவரின் காலை கடித்தது.
கிளீனரின் காலை கடித்தபிறகு எதிர்புறமுள்ள வீட்டை நோக்கி சென்ற சிறுத்தை, நாய்களை கண்டு பண்ணை வீட்டில் புகுந்தது. தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், அதை மயக்க ஊசிபோட்டு பிடித்து சென்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.