ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்தி இணைய வழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக சி இ ஆர் டி எனப்படும் இந்திய இணையவழி பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தங்களை மனிதவள துறையை சேர்ந்தவர் அல்லது பிரபலமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் சிலர், கொரோனா பரிசோதனைக் கருவிகள் வழங்குவதாகவும், நிவாரண மருந்து தருவதாகவும் கூறி செயலியைப் பயன்படுத்தியவர்களை தொடர்பு கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் அவர்கள் மூலம் தனிப்பட்டத் தகவல்களைத் திரட்டி, பணப்பரிவர்த்தனை குறித்து பேசப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் சி இ ஆர் டி எச்சரித்துள்ளது.