வங்கக்கடலில் உருவாகி உள்ள அம்பான் புயலால் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பான் புயல் ஓடிசாவின் 12கடலோர மாவட்டங்களை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நவீன் பட்நாயக் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பேசிய அவர், புயல் கடலோர மாவட்டங்களை தாக்கக்கூடும் என்பதால் ஒவ்வொரு மனித உயிரும் காப்பாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வரும் 18 அல்லது 19ஆம் தேதிகளில் புயல் ஒடிசாவை தாக்கக்கூடும் என்பதால் நிவாரண நடவடிக்கைகளில் தேசிய மீட்பு படையினர் உள்பட முக்கிய படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார். எனவே மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் மாநில அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நவீன்பட்நாயக் கேட்டுக் கொண்டார்.