பஞ்சாப் மாநிலத்தில் தளர்வுகளுடன் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், மத்திய அரசு அறிவிக்க உள்ள ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் முதலமைச்சர் அமரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.
மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊரடங்கை நீடிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். ஊரடங்கை மாத இறுதி வரை அமல்படுத்த முயற்சிக்கும் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கும்படியும் அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அனைத்து நகரங்களிலும் தொழில் வர்த்தகத்திற்கான கடைகளும் அலுவலகங்களும் நாளை முதல் திறக்கப்படும் என்றும், கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட வீதிகள் மட்டும் அடைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பஞ்சாபில் 657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .32 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.