கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் சுமார் ஐந்தரை லட்சம் அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த ஆய்வில், உலகம் முழுவதும் கடந்த 12 வாரங்களில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 2 கோடியே 84 லட்சம் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால், கூடுதலாக 24 லட்சம் அறுவை சிகிச்சைகள் ரத்தாகும் சூழல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.