உள்நாட்டு விமானப் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ள நிலையில் விமான நிலையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
அனைத்துப் பயணிகளும் தங்களது ஸ்மார்ட் போனில் ஆரோக்கிய சேது செயலியை தரவிறக்கி வைத்திருப்பது கட்டாயமாகும்.
முகவுறை மற்றும் இதர பாதுகாப்பு கவசங்களுடன் தலா 4 அடி இடைவெளியை பயணிகள் கடைப்பிடிக்க வேண்டும். இணையத்தில் வெப்ப பரிசோதனை செய்வதுடன், அதற்கான அச்சுப் பிரதியை கையில் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விமானப் பயணிகள் தங்களது சூட்கேசில் 350 மில்லி அளவுக்கு சானிடைசர்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுவர். போர்டிங் பாஸில் முத்திரை குத்தும் நடைமுறைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.