பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை காணொலிக் காட்சி மூலம் தொடர்ந்து நடத்த சிபிஐ நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையை முடித்து ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும், கொரோனா பரவல் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டதை தொடர்ந்து பா.ஜ.க மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தர பிரதேச முதல்வர் கல்யாண்சிங், வினய் கத்தியார், விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.