இந்தியாவுக்கு அமெரிக்கா வெண்டிலேட்டர்களை இலவசமாக வழங்கும் என்று பெருமையுடன் அறிவிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் நிற்கும் இந்திய மக்களுக்கும் பிரதமர் மோடிக்கும் அமெரிக்கா முழு ஆதரவளிக்கும் என்றும் டிரம்ப் உறுதியளித்துள்ளார். மருந்து தயாரிப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்படுவதாக சுட்டிக் காட்டியுள்ள டிரம்ப், இருநாடுகளும் ஒன்றிணைந்து கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனாவை வெல்வோம் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒரு குழுவை அமெரிக்கா நியமித்துள்ளது. இக்குழு நூற்றுக்கணக்கான மில்லியன் டோஸ் மருந்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாரிக்க உள்ளது. இம்முயற்சிக்காக பத்து பில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது. மூன்று விதமான மருந்துகளை தயாரிப்பதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன.