மே 17க்குப் பின்னர் ஊரடங்கின் நான்காவது கட்டத்தில் பேருந்துகள், விமான சேவைகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிப்பு இல்லாத மற்றும் குறைவாக உள்ள பகுதிகளில் உள்ளூர் மக்கள் போக்குவரத்துக்காக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஆட்டோ டாக்சிகளும் இயக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இயல்பு நிலையை படிப்படியாக கொண்டு வருவதே நான்காவது ஊரடங்கின் நோக்கமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதே போல் சில பகுதிகளுக்கு விமான சேவைகளும் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்சேவைகள் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.முதலமைச்சர்களுடன் காணொலி மூலமாக 5வது முறை ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, நான்காம் கட்ட ஊரடங்கு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.