வளைகுடாவில் இருந்து திரும்பி வந்த பயணிகளால் கேரளாவில் கொரோனா பாதிப்புகள் திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
நேற்று மட்டும் 26 பேருக்கு நோய்த்தொற்று பதிவாகியுள்ளன. மார்ச் இறுதிக்குப் பின் இதுவே அதிகபட்சமாகும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த 26 பேரில் எட்டு பேர் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்ட்ராவில் இருந்து வந்தவர்கள் என்றும் மற்றவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக கேரள எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டவர்களை கேரள எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் குழு ஒன்று நேரில் சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.