மேற்கு வங்க அரசு ரயில்களை அனுமதித்தால் தினமும் 100 ரயில்களை விடத்தயார் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் இருந்து புலம் பெயர்ந்த வங்காள மக்களை சொந்த ஊர்களுக்குத் திரும்ப அழைத்து வர சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது. ஆனால் இதற்கு சில மாநில அரசுகள் ஒத்துழைக்க மறுப்பதாக பியூஷ் கோயல் தெரிவித்தார்.
முதலில் இரண்டு ரயில்களை மட்டும் மம்தாபானர்ஜியின் அரசு அனுமதித்தது. உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியதையடுத்து மேலும் 8 ரயில்களுக்கு மாநில அரசு அனுமதியளித்தது. ஆனால் திடீரென இன்று வர உள்ள 5 ரயில்களுக்கு மட்டுமே மாநில அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சட்டிஸ்கர் போன்ற வேறு சில மாநிலங்களும் சிறப்பு ரயில்கள் மூலமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைத்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவது வேதனையளிப்பதாக உள்ளது என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.