உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் சமையல்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த நீதிபதியும் அவர் குடும்பத்தினரும் தங்களை தாங்களே சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு மற்றும் நாடு தழுவிய ஊரடங்கால் வீட்டில் இருந்த படியே காணொலி மூலமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து வருகின்றனர். கடந்த செவ்வாயக்கிழமையில் இருந்து சில வழக்குகளை நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதிகள் விசாரிக்க ஒப்புதல் அளித்து விசாரித்தும் வருகின்றனர். ஆனால் நீதிபதி ஒருவரின் சமையல்காரருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கையாக அந்த நீதிபதியின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.