கேரளத்தில் ஒருவரின் வீட்டில் விளைந்த பலாப்பழம் 51 கிலோ எடையுள்ளதால் அதைக் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய முயற்சி எடுத்துள்ளார்.
கொல்லம் மாவட்டம் எடமூலக்கல் என்னும் ஊரில் ஜான்குட்டி என்பவரின் வீட்டில் உள்ள பலாமரத்தில் மிகப்பெரிய பலாப்பழம் விளைந்துள்ளது.
97 சென்டிமீட்டர் நீளமும் 51 கிலோ 400 கிராம் எடையும் கொண்ட இந்தப் பலாப்பழம் குறித்த படங்கள் டுவிட்டரில் வெளியாகியுள்ளது. இதற்கு முன் 42 கிலோ 700 கிராம் எடையுடன் புனேயில் விளைந்த பலாப்பழமே மிகப்பெரியதாக இடம்பிடித்துள்ளதாகவும், அதனால் தனது பலாப்பழத்தைக் கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்திலும், லிம்கா இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறச் செய்ய உள்ளதாகவும் ஜான்குட்டி தெரிவித்துள்ளார்.