4ம் கட்ட ஊரடங்கின் போது குறைந்த அளவிலான பொதுப் போக்குவரத்து இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் துறைகளின் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவதோடு, குறைந்த அளவிலான உள்நாட்டு விமான போக்குவரத்தும் தொடங்கும் எனவும், அதே சமயம் சர்வதேச விமானப் போக்குவரத்தை தொடங்குவது குறித்து இதுவரை முடிவேதும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பாதுகாப்பாக டெல்லி மெட்ரோ சேவையை துவங்க மத்திய தொழில் பாதுகாப்பு படை வழிமுறைகளை வகுத்துள்ளது. பாதிப்புகளின் அடிப்படையில் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலமாக நிர்ணயிக்கும் வழிமுறைகளில் மாற்றமிருக்காது என்றும், அதே சமயம் குறைந்தபட்ச அளவிலான தடைகளே நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் வணிக நடவடிக்கைகள் தொடங்கப்படும். சிவப்பு மண்டலங்களிலும் அத்தியாவசியமல்லாத பிற பொருட்களையும் டெலிவரி செய்ய இ-வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.