வெளிநாடுகளில் கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களில் 48 சதவீதம் பேரின் திட்டங்களுக்கு, கொரோனா பெருந்தொற்று சூழலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
சர்வதேச அளவில் கல்விநிறுவன தரப்பட்டியலை வெளியிடும் லண்டனை சேர்ந்த குவாக்குரெல்லி சைமன்ட்ஸ் (Quacquarelli Symonds) அமைப்பு, 2020ம் ஆண்டுக்கான இந்திய மாணவர்களின் இயக்கம் குறித்த அறிக்கை, உயர்கல்வி வாய்ப்புகளில் கோவிட் 19 ஏற்படுத்திய பாதிப்பு என்ற பெயரில் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், வெளிநாடுகளில் கல்வி பயில வேண்டுமென்று விரும்பிய இந்திய மாணவர்கள் 48 புள்ளி 46 சதவீதம் பேரின் முடிவில் கோவிட் 19 பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் பயின்ற மாணவர்களில் பெரும்பகுதியினர், இந்தியாவுக்கு வெளியே உயர்கல்வி பயில வேண்டுமென்ற முடிவை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.