கொரோனா இயற்கையாக உருவானது அல்ல, ஆய்வு கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரஸ் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம்சாட்டியுள்ளார்.
சீனாவின் வூகான் ஆய்வு கூடத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதை சீன அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதுகுறித்து இந்திய அரசு இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு நிதின் கட்கரி அளித்துள்ள பேட்டியில், கொரோனா சூழ்நிலைக்கு மத்தியில் வாழும் கலையை மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், ஏனெனில் கொரோனா வைரஸானது இயற்கையானது அல்ல, செயற்கையாக ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால் சீனாவின் பெயரை தனது பேட்டியில் அவர் குறிப்பிடவில்லை.