உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்யுமாறு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெறும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி மற்றும் நான்கு மாதங்களுக்கு விவசாயிகளின் மின் கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களுக்கு, அரசுப் பேருந்துகளை கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.