கொரோனா நோய்த்தொற்று சூழலை எதிர்கொள்வதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி இந்தியாவுக்கு 7ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளித்துள்ளது.
வங்கியின் துணைத் தலைவர் ஷியான் ஜூ வெளியிட்ட அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில், கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு உதவ புதிய வளர்ச்சி வங்கி உறுதியுடன் இருப்பதாக குறிப்பிட்டார். கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் வங்கியின் அவசரகால உதவித் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.