மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து பணியாற்றும் காவலர்களுக்கு ஓய்வு கொடுக்க 20 கம்பெனி மத்தியக் காவல் படையினரை அனுப்புமாறு மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் 24 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 25 முதல் ஊரடங்கு கடைப்பிடிப்பதால் மாநிலக் காவல்துறையினர் இடைவிடாமல் ஓய்வில்லாமல் பணியாற்றி வருகின்றனர்.
மூத்த காவலர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க அவர்களுக்குக் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈத் பெருநாளும் வருவதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்கக் கூடுதல் காவல்படையினர் தேவைப்படுவதாக உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
இதனால் 20 கம்பெனி மத்தியக் காவல் படையினரை அனுப்பி வைக்க மத்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கெனவே 32 கம்பெனி மத்திய ரிசர்வ் காவல்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.