ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 137 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48 பேருக்குக் கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்துப் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 137 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 142 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. 948 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிக அளவாகக் கர்நூல் மாவட்டத்தில் 591 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 399 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தில் 349 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.