பிரதமரின் சுயசார்பு திட்டத்தை ஏற்று வரும் ஜூன் முதல் துணை ராணுவப் படையினருக்கான பண்டகசாலைகளில் இந்தியாவில் தயாராகும் பொருள்கள் மட்டுமே விற்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கான பொருளாதார நிதித் திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடி, உள்ளூர் பொருட்களை வைத்துக் கொண்டு சுயசார்பை எட்டுமாறு கேட்டுக் கொண்டார்.
இதன் அடிப்படையில், சுமார் 10 லட்சம் துணை ராணுவப் படையினரும், அவர்களது குடும்பத்தினர் 50 லட்சம் பேரும் பயன்படுத்தும் பண்டகசாலைகளில் சுதேச தயாரிப்புகள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. .
துணை ராணுவப் படையினருக்கான பண்டகசாலைகளில், ஆண்டொன்றுக்கு 2800 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெறுகிறது.