கொரோனா பொருளாதார நிவாரணத் திட்டமாக பிரதமர் மோடி 20 லட்சம் கோடி ரூபாயை அறிவித்ததன் எதிரொலியாக, இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கின.
மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் இன்று காலை 1470 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கியது. இதனால் பங்குசந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று மாலை சென்செக்ஸ், 31,371 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
இன்று காலை அது 32,841 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. தேசிய பங்கு சந்தையான நிப்டி 213.50 புள்ளிகள் உயர்ந்து 9410.05 புள்ளிகளாக வர்த்தம் துவங்கியது. வங்கித் துறை, கட்டுமானம், இருசக்கர வாகனம், சிமென்ட் உற்பத்து துறைகள் நல்ல உயர்வை கண்டன. அதே சமயம், ஆசிய பங்கு சந்தைகளில் பங்குவர்த்தகம் வீழ்ச்சியுடன் நடைபெறுகிறது.