டெல்லியின் மேற்கு பகுதியில் கொரோனா நோய் உறுதியான ராணுவ வீரர் ஒருவர், மருத்துவமனை வளாகத்திலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டெல்லியின் தெளலாகான் பகுதியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு முதலில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா உறுதியானதால், நைரானாவிலுள்ள இன்னொரு ராணுவ மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த வந்தநிலையில், கழிவறைக்கு திங்கள்கிழமை நள்ளிரவில் சென்ற அவர் திரும்பிவரவில்லை.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.