கொரோனா ஊரடங்கால், நகர்ப்புற வேலையாட்களில் 10 ல் 8 பேருக்கு வேலை போய்விட்டதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் கடந்த 9 ஆம் தேதி வரை, பெங்களூருவில் உள்ள அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழக குழுவினர், கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 12 மாநிலங்களில் இந்த ஆய்வை நடத்தினர். அதில், நகரங்களில் சுய வேலை பார்ப்பவர்களின் வாராந்திர வருமானம் 90 சதவிகிதம் வரை குறைந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாத நிலைமை இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
10 ல் 8 பேர் மாத வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலைமையில் உள்ளதாகவும், கிராமப்புறங்களை பொறுத்தவரை 10 ல் 6 பேருக்கு வேலைவாய்ப்புகள் இல்லை எனவும் ஆய்வு தெரிவிக்கிறது.
class="twitter-tweet">Some results from our #COVID19 lockdown impact survey.
1. 8 in 10 urban and almost 6 in 10 rural worker lost employment .
2. Self-employed earnings fell by 90%.
3. Casual workers earnings fell by half.
4. Half of salaried workers: reduction in salary or received no salary. https://t.co/GPsuXUXwAo pic.twitter.com/liIeWjlrre