தமிழகத்திற்கு வருகிற 31-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்து கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என வலியுறுத்தி உள்துறை அமைச்சர் மற்றும் ரயில்வே துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
2 ரயில்கள் மூலம் சென்னை வரும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகளை, கொரோனா பரிசோதனைக்காக ரயில்வே துறை மூலமே தனிமைப்படுத்தி வைக்கவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரும் 31 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு ரயில்களை இயக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி தலைமையில் காணொலி முறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார். இருப்பினும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட காரணத்தால் வரும் 14 மற்றும் 16 ஆம் தேதி இரு ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இவ்விரு ரயில்கள் தவிர இதர வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.