மும்பையில் மிகவும் அதிக அளவில் கொரோனா நோய்த் தொற்று பரவியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கும் தாராவியில் மட்டும் ஆயிரம் எண்ணிக்கையைத் தொட்டுள்ளது.
இந்தியாவில் ஆயிரம் பேரை பாதித்துள்ள முதல் குடிசைப்பகுதியாகவும் இது இடம் பெற்றுள்ளது. தாராவியில் மட்டும் 31 பேர் உயிரிழந்துவிட்டனர். சமூக இடைவெளிக்கே இடமில்லாத மிகவும் நெருக்கமான குடிசைப்பகுதிகளில் சுமார் 8 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை 46 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 962 ஆக உயர்ந்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் இது ஆயிரத்தைக் கடந்துவிடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனிடையே புதிதாக பொறுப்பேற்ற மும்பை மாநகராட்சி ஆணையர் சஹல் ( CHAHAL ) மருத்துவர் குழுவினருடன் தாராவி பகுதியில் நிலைமையின் தீவிரத்தை ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார்.