பிரதமர் மோடி அறிவித்த பொருளாதார நிவாரணத் திட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமானது என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் சிறு, குறுந்தொழில்கள் மற்றும் கிராமப்புற சிறுதொழில்களுக்கு பிரதமர் அறிவித்துள்ள இந்த பொருளாதார ஆதரவு மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர் கொரோனாவால் ஒருபுறம் பல லட்சம் பேர் வீட்டில் முடங்கும் நிலை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருந்த போதும் ஆறுகளும் ஆகாயமும் மாசு நீங்கி தூய்மை அடைந்தது , ஆண்டுக்கு 5 லட்சம் விபத்துகள் இருந்து வந்த நிலையில் இக்காலகட்டத்தில் விபத்துகளே இல்லாமல் போனதும் சாதகமான அம்சங்கள் என்று தெரிவித்தார்.காற்று மாசுவை தடுக்க ,போக்குவரத்து முடங்கியிருக்கும் காலங்களில் சைக்கிள்களை பயன்படுத்துமாறும் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார்.