பிரதமர் மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான நிவாரணத் தொகை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்று சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்து இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் மீளச்செய்ய வேண்டும் என்று FICCI அமைப்பின் பொதுச் செயலாளர் திலீப் செனாய் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு இந்தியாவை மீண்டும் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைமை இயக்குநர் சி.பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமரின் நிதித்தொகுப்பு ஏழைகள் மற்றும் சிறுகுறுந்தொழில்களுக்கு புத்துயிர் கொடுக்கும் என்று பல்வேறு தொழில் அமைப்புகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.