கொரோனா அச்சுறுத்தலால் நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களை மீண்டும் இயக்குவதற்கு புதுமையான மாற்று வழிகளை கண்டறிய வேண்டும் என்று தொழில்முனைவோருக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பான அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், எண்ணற்ற சவால்கள் நிறைந்த இந்த இக்கட்டான சூழ்நிலை, புதிய மேம்பட்ட விஷயங்களை கண்டறிய வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழில் முனைவோரின் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றல் மீது தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும், அவர்கள் உருவாக்கும் புதிய மற்றும் மாற்று வழிமுறைகள் நாளைய வரையறையாக இருக்கும் என்றும் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.