சொந்த நாடு திரும்ப விரும்பாமல்,டெல்லி விமான நிலையத்தின் டிரான்சிஸ்ட் பகுதியில் (Transit area) ஜெர்மானியர் ஒருவர் கடந்த 55 நாள்களாக தங்கியுள்ளார்.
வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரிலிருந்து விமானத்தில் டெல்லி வழியாக துருக்கியின் இஸ்தான்புல் செல்ல ஜெர்மனியின் 40 வயதான எட்கார்ட் ஜிபாட் (Edgard Ziebat) மார்ச் 18ம் தேதி வந்தார்.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 18 முதல் துருக்கியுடனான விமான போக்குவரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து சர்வதேச விமான போக்குவரத்தையும் ரத்து செய்தது. இதனால் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் டிரான்சிஸ்ட் பகுதியில் 55 நாள்களாக வசிக்கிறார். நாட்டை வெளியேறும்படியும் அவருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு விட்டது.
ஜெர்மன் தூதரகமும் உதவ முன்வந்தது. ஆனாலும் அந்த உதவியை மறுத்து, சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கியபிறகு செல்வதாக அவர் தெரிவித்து விட்டார்.