திருப்பதி கோயிலில் பல்வேறு சேவைகளில் பங்கேற்க முன்பதிவு செய்த பக்தர்களில் 90 சதவீதம் பேருக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசு நிபந்தனைகளின் படி மார்ச் 14ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையில் ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதற்காக முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் பணத்தை திரும்ப பெறுவதற்காக தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கினர். அவர்களில் சுமார் ஒரு லட்சத்து 93ஆயிரத்து 580 பக்தர்களுக்கு டிக்கெட்டிற்கான பணம் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.