ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விஷ வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இரவு நேரத்தில் தங்க அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவுறுத்தியுள்ளார்.
12 பேரைப் பலிகொண்ட இந்த சம்பவத்திற்குப் பின், 5 கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்பகுதியில் தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபின், கிராம மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
எனினும் விஷவாயு பாதிப்பின் எச்சங்கள் இருக்கக் கூடும் என்பதால் ஏ.சி., சமையலறை, திறந்த வெளி நீர் நிலைகள் பால்பொருட்கள், கால்நடைத் தீவனங்கள் உள்ளிட்டவற்றை வல்லுநர் குழு ஒப்புதல் அளிக்கும் வரை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.