பெங்களூரூ கவுடா சர்வதேச விமான நிலையம் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் சிறந்த விமான நிலையமாக வாடிக்கையாளர்களால் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 550 விமானநிலையங்களில் வாடிக்கையாளர் சேவை மற்றும் வசதிகளை மதிப்பிட்டு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
11 ஆண்டு பழமையான கெம்பேகவுடா விமான நிலையத்தைப் பொறுத்தவரை இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பெங்களூர் சர்வதேச விமான நிலைய லிமிடெடின் நிர்வாக இயக்குநர் ஹரி கே மரார் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் உருவாக்கி உள்ள சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த விருது புத்துயிர் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.