கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 70 சதவீத மக்களை நோய் தொற்று பாதிக்கும் என அமெரிக்க பேராசிரியர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள இந்திய சுகாதார மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இணையதளம் வாயிலாக கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் பிஷாய், உலக மக்கள் தொகையில் 60 முதல் 70 சதவீதம் பேர் போதிய நோய் எதிர்ப்பு சக்தி பெறும் வரை, வைரஸ் பரவல் முடிவடையாது என்றார்.
ஏனெனில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை உருவாக்க 18 முதல் 24 மாதங்கள் வரை ஆகலாம்’ என பேராசிரியர் பிஷாய் குறிப்பிட்டார்.