பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் நீரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் துவங்கவுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய 13,000 கோடி ரூபாய் கடனை திருப்பித் தராமல் லண்டன் தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் துவங்க உள்ளது.
வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீரவ் மோடி வழக்கு விசாரணையின் போது நேரில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தலால் அதற்கு சாத்தியமில்லாத பட்சத்தில் காணொலிக் காட்சி மூலம் நீரவ் மோடியிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.