போக்ரான் அணு குண்டுச் சோதனை இந்திய வரலாற்றில் குறிப்பிடத் தக்க தருணம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1998ஆம் ஆண்டு மே 11ஆம் நாள் ராஜஸ்தானின் போக்ரானில் அணு குண்டை வெடிக்கச் செய்து இந்தியா சோதித்தது. இந்த நாள் ஆண்டுதோறும் தொழில்நுட்ப நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதையொட்டிப் பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், பிறர் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவோரை நாடு தலைவணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களை வணங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நலமான சிறந்த உலகை உருவாக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.