இந்திய கடற்படைக் கப்பலான கேசரி மாலத்தீவு, மொரீஷியஸ், செசல்ஸ், மடகாஸ்கர், கோமரோஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்றது.
உணவுப் பொருட்கள், கோவிட்-19 க்கான ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்ட பொருட்களுடன் இந்த கப்பல் நேற்றிரவு புறப்பட்டுச் சென்றது.இக்கப்பலில் சில மருத்துவக் குழுக்களும் இடம் பெறுகின்றனர்.
கொமோரோஸில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கான சிகிச்சையளிக்க அங்கு மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆறு நாடுகளுக்கு இந்தியா தனது உதவிக்கரத்தை நீட்டியுள்ளது.