அஸ்ஸாமில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலின் விளைவாக கடந்த சில தினங்களில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான பன்றிகள் உயிரிழந்துள்ளன.
அசாமில் பன்றிக் காய்ச்சல் பரவுவதால் காசிரங்கா தேசியப்பூங்காவில் அகழி வெட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் காட்டு பன்றிகளும், நாட்டுப் பன்றிகளும் கலப்பது தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்கனவே 6 மாவட்டங்களில் கண்டறியப்பட்ட இந்தத் தொற்று, தற்போது மேலும் 3 மாவட்டங்களுக்குப் பரவி உள்ளதாக கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதனால் மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்துக்கும் அதிகமான பன்றிகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.