செல்போன்கள் தொடும்போது கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் செல்போன்களை சுத்தம் செய்வதற்கான சானிட்டைசரை ஹைதராபாத் DRDO ஆய்வுக்கூடம் கண்டுபிடித்துள்ளது. இது மனித விரல்களுக்குத் தொடர்பில்லாமல் தானியங்கி முறையில் செயல்படுகிறது.
DRUVS என்றழைக்கப்படும் இந்த சானிட்டைசர் மூலம் மொபைல்கள், ஐபேட்கள், லேப்டாப்கள், ரூபாய் நோட்டுகள், ரசீதுகள் மீது படிந்த கொரோனா தொற்றை சுத்தம் செய்து விட முடியும். கேபினட் அறைக்குள் குறிப்பிட்ட பொருளை வைத்து விட்டால் தானாகவே சுத்தம் செய்துவிடும்.
இவ்வாறு மின்னணு சாதனங்கள் சுத்தம் செய்யப்படும் போது அவை "ஸ்லீப் மோடு"க்கு போய்விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.