சத்தீஸ்கரின் முதலாவது முதலமைச்சரும் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவருமான அஜித் ஜோகி கோமா நிலையில் உள்ளார்.
அரசு அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர் சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்ட போது காங்கிரஸ் முதலமைச்சராக 2000 முதல் 2003 வரை இருந்தார்.
பின்னர் கருத்து வேறுபாடுகளால் 2016 ல் காங்கிரசில் இருந்து விலகி ஜனதாகாங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி இப்போது எம்எல்ஏ வாக இருக்கிறார். 74 வயதான அவர் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ரெய்பூர் ஸ்ரீநாராயணா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது நரம்பியல் மண்டலம் முழுவதும் ஸ்தம்பித்துவிட்ட நிலையில் இன்று அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.