10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பரவல் பதிவாகவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியின் மன்டோலி பகுதியில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றார்.
மத்திய அரசு தரப்பில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் இதுவரை 72 லட்சம் என்95 முகக்கவசங்களும், 35 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் ஹர்ஷ்வர்த்தன் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் 4 ஆயிரத்து 362 கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.