மத்திய உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று மேற்குவங்க அரசு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர ரயில்களை இயக்க அனுமதியளித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், பீகார்,மத்தியப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வர சுமார் 300 ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் மேற்கு வங்க அரசு மட்டும் ரயில்களை இயக்க அனுமதிக்கவில்லை என்று ரயில்வே அமைச்சகம் புகார் தெரிவித்திருந்தது. இதையடுத்து நேற்று பிற்பகல் உள்துறை அமைச்சகம் சார்பில் மேற்குவங்க அரசுக்கு ரயில்களை இயக்க அனுமதிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று தமிழகத்தில் இருந்து இரண்டு ரயில்கள், தெலுங்கானாவில் இருந்து ஒரு ரயில், கர்நாடகாவில் இருந்து 3 ரயில்கள், பஞ்சாபில் இருந்து 2 ரயில்களுக்கு மேற்கு வங்க அரசு அனுமதியளித்துள்ளது.